மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல், இரண்டு சாதனைகளுக்காக காத்திருக்கின்றார்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, தற்போது இந்தியா அணியுடன் தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை டிரினிடெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இது கிறிஸ் கெய்லுக்கு 300ஆவது ஒருநாள் போட்டியாக அமைய உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 296 போட்டிகளில் விளையாடிய கெய்ல், 10,342 ஓட்டங்கiளை எடுத்துள்ளார்.
இதுதவிர ஐ.சி.சி., அணிக்காக 3 போட்டிகளில் 55 ஓட்டங்கள் என, 299 போட்டியில் மொத்தம் 10,397 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஒருநாள் அரங்கில் 300ஆவது ஒருநாள் போட்டி என்ற மைல்கல் மற்றது மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக ஓட்டங்கள் என்ற சாதனை என இரண்டிற்க்குமாக நாளைய போட்டியை கெய்ல் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றார்.
கிறிஸ் கெய்ல, இன்னமும் 7 ஓட்டங்கள் எடுக்கும் பட்சத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை பதிவுசெய்வார். தற்போது ஜாம்பவான் பிரையன் லாரா, மேற்கிந்திய தீவுகள் அணிக்காக களமிறங்கிய 295 போட்டிகளில் 10,348 ஒட்டங்;கள் எடுத்து முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.