கொழும்பில் இராணுவச்சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு தேசிய பாதுகாப்புக்கமைச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவச்சிப்பாய் ஒருவரே தம்மைத் தாமே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் அவரது தனிப்பட்ட பிரச்சினையால் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பொலிசார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.