சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23 வயது இளைஞனுக்கு கொரோனா வைரஸ் இரண்டாவது தடவையாக இறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 16ம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பிய இந்த நபர் ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்.
இரணவில கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டு பூரண குணம் பெற்று வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் அவர் சுகயீனம் காரணமாக சிலாபம் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த நபர் பயணித்த மற்றும் இருந்த பகுதியில் தொற்று பரவியிருக்குமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.