ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்க உள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று தனது 68 ஆவது நிறைவை இன்று கொண்டாடுகின்ற நிலையில், இதனை முன்னிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாநாடும் இன்று நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின்போதே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.