ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் இறுதி நாள் இன்றாகும்.
கடந்த 13ம் திகதி ஆரம்பமாகிய தபால்மூல வாக்களிப்பில் வாக்களிக்கத் தவறியவர்கள் இன்றைய தினத்தில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பொலன்னறுவை – ராஜாங்கனை பிரதேசத்தில் இன்று தபால்மூல வாக்களிப்பு இடம்பெறுகிறது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.