பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 வீதிகள் மற்றும் 5 பெரிய பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் காஷ்மீர் என பெயர் சூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாகாண முதலமைச்சர் உஸ்மான் புஷ்தார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் உதவியையும் நாடியது. இந்த முயற்சியும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சாலைகளுக்கு காஷ்மீர் என பெயர்சூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.