இது ஒரு இனவாத கட்சி என்று கடந்த காலங்களில் எமது கட்சியை பலர் விமர்சித்தார்கள், இல்லாத பொய்களை எல்லாம் கூறினார்கள். அவர்கள் கூறியது அனைத்தும் பொய் என நிரூபணமாகியுள்ளதாக
பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
இலங்கை பொதுஜன பெரமுனவின் இளைஞர் மற்றும் மகளீர் மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எமது கட்சியின் வளர்ச்சிக்கு இங்குள்ள இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு வகையான பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர்,பசில் ஆகியோரின் தூரநோக்கிற்கமைய, நேரடியாகாவே இந்த இளைஞர் யுவதிகளின் முன்னேற்த்திற்கான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கின்றமை எமக்கு பாரிய பங்களிப்பாக இருக்கிறது.
இது ஒரு இனவாத கட்சி என்று கடந்த காலங்களில் இந்த கட்சியை பலர் விமர்சித்தார்கள், இல்லாத பொய்களை எல்லாம் கூறினார்கள்.இன்று ஜானதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. என்ன நடந்தது. அவர்கள் கூறியது அனைத்தும் பொய் என்றவகையில் சமூகங்களின் பிரச்சனைகள் சமமாக தீர்கப்படுகின்றது. சில பிரச்சனைகள் இருக்கின்றது. சில சமூகம் பாதிக்கப்படக்கூடியதான பிரச்சனைகள் இருக்கின்றது. அந்த பிரச்சனைகளை தீர்பதற்காக விசேட குழுக்கள் அமைத்தாலும் அதன் முடிவுகளால் சில சமூகங்கள் பாதிக்ககூடிய நிலை இருக்கிறது. அது தொடர்பாக நாம் அந்த குழுக்களுடனும், அதன் உயர் தலைவர்களுடனும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அதுபோல அனைத்து சமூகங்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பேரும்பாண்மை சமூகத்தைவிட தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகளே எமக்கே அதிகம் கிடைதத்தது.அதில்மாற்று கருத்து இல்லை. அதுபோல எதிர்வரும் காலங்களில் வரவிருக்கும் தேர்தல்களிலும் அதனைவிட அதிகமான வாக்குகளை நிச்சயம் எடுப்போம். அபிவிருத்திகளை கிராம மட்டத்திற்கு கொண்டுபோய், விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தி மக்களின் வாழ்கைதரத்தை குறைத்து வறுமையை குறைப்பதற்காக பல்வேறு திட்டங்கள் இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.
நாங்கள் அபிவிருத்தி செய்ய கூடிய தலைவர்களுடனேயே இருக்கிறோம்.
அத்துடன் இன்றைய இளைஞர்கள் பாரிய பொறுப்புடன் இருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் சமூகத்தின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு அதிகம் என்றார்.
மாநாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சுமதிபால, சிங்கள பிரதேச சபையின் உபதலைவர், நகரசபை உறுப்பினர் பாயிஸ், பொதுமக்கள், இளைஞர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
