இனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை ஏற்பட்டால் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியாது என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் அஹகமட் ஷகீட் இற்கும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஐ.நா பிரிதிநிதி இலங்கையில் இனங்களுக்கிடையில் மதம் தொடர்பாக சிறந்த நல்லிணக்கம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மதம் தொடர்பாக கற்பதற்காக அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.