இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நாளொன்றில் 49 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அத்துடன் 700 இற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.
இதனால் பல்வேறு நெருக்கடிகள் உருவாகியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. நிலமையை கட்டுப்படுத்த பல்வேறு நகரங்களை தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதவரை இந்தியாவில் 13 இலட்சத்து 37 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 31 ஆயிரத்து 406 பேர் உயிரிழந்துள்ளனர்.