ஜார்விஸ் தீவு என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள தீவு ஆகும். இத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. 4.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த தீவு பவளப்பாறைகளால் ஆனது. இத்தீவு, தென் பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் குக் தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது.
1821-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் திகதி பிரிட்டிஷ் நாட்டின் எலிசா பிரான்சிஸ் கப்பலில் சென்ற ஐரோப்பியர்கள் இந்த தீவினைக் கண்டுபிடித்தனர். ஆளில்லா இந்த தீவு, குவானோ தீவுகள் சட்டப்படி தங்களுக்கே சொந்தம் என்று 1857-ம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. அதன்பின்னர் 1858ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் திகதி முறைப்படி அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.