ஆர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் ஜோஸ் லூயிஸ் பிரவுன் தனது 62 அவது வயதில் உயிரிழந்துள்ளார்.
அவரது மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் நேற்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1986 இல் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற ஆர்ஜென்டினா அணியில் இவரும் இடம்பெற்று இருந்தார்.
அந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தியது.
இதில் ஆர்ஜென்டினா அணிக்காக முதல் கோல் அடித்தவர் லூயிஸ் பிரவுன். ஆர்ஜென்டினா அணிக்காக 36 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இளையோர் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.