கொழும்பு – கிரான்பாஸ் பகுதியில்நேற்று அதிகாலை தீ பரவிய நிலையில், அந்த மக்கள் குறித்து ஆராய்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில், ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெளிவூட்டல்களை வழங்கியுள்ளது.
தனது பேஸ்புக் தளத்தில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
வட கொழும்பில் தீப்பற்றிய குடிசைகளை பார்வையிட சென்ற வேளையில், அருகிலுள்ள பௌத்த பிக்குவொருவரே தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மனோ கணேசன் கூறுகின்றார்.
அந்த பௌத்த பிக்குவுடன் நான்கு பேர் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குவும், அந்த நபர்களும் மொட்டு கட்சிகாரர்கள் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) என மனோ கணேசன் தெளிவூட்டியுள்ளார்.
தமது நல்லாட்சி காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மாடி வீட்டுத் திட்டத்திலுள்ள பல வீடுகளை, இவர்கள் மக்களுக்கு வழங்காமல் வைத்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி போதே, குறித்த தரப்பினர் எதிர்ப்புக்களை வெளியிட்டதாகவும் அவர் தனது பேஸ்புக் பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார்.
”பௌத்த ஆமதுரு என்பதால், நான் தலை குனிந்து மூடிக்கொண்டுவர வேண்டுமா?” என மனோ கணேசன் தனது பதில் இறுதியாக கேள்வி எழுப்பியுள்ளார்.