ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 145 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபூலில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தினை இலக்கு வைத்து இந்த குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 10 பொதுமக்களும், 4 பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதுடன், 92 பொதுமக்கள் உள்ளிட்ட 145 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் குறித்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கும், தலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.