இந்துமத கடவுளரில் எல்லா கடவுள்களும் ஆடை ஆபரனத்துடன் பட்டோபகரமாக ஆடம்பரத்துடன் காட்சியளிக்கும் வேளையில், சிவன் மட்டுமே ஆதிகால மனிதரைபோல் காட்சியளிக்கிறமையின் காரணம் என்ன?
சிவன் யார் ? 20,000 ஆண்டுகளுக்கு முன்பு, குமரிகண்டத்தில் வாழ்ந்த சித்தனா? ( கடல்கோளால் மக்கள் கும்பலாய் மரித்த கண்டம் =குமரி கண்டம் )
அக்கால மக்கள், மலைகளிலேயே வேட்டையாடி வாழ்ந்துவந்ததால், விலங்குகளின் தோலை ஆடையாக அனிந்தனர். அந்த மலைக்குடியில் வாழ்ந்த சிவனும் புலியின் தோலையே ஆடையாக அனிந்தார்..
வேட்டை பயனத்திற்கு காளை மாட்டை பயன்படுத்தியமையால், அதை வரலாற்றில் கடத்த “நந்தி” அவரது வாகனமாக அடையாளப்படுத்தினர்.
விலங்குகளை வேட்டையாடுவதுதில் , தன்னிடம் இருந்து புறப்படும் ஆயுதம் வேட்டை விலங்கின்மீது துல்லியமாக விழ கால கணிப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.
அதன் பொருட்டு கால அளவுகளை முதன் முதலில் கனித்து வகுத்தவர் “சிவனே”
இதன் தொடர்ச்சியாக நிலவை அடிப்படையாக கொண்டு நாட்களையும், மாதங்களையும் கனிக்கும் முதல்நிலை நாட்காட்டியை உலகிற்க்கு அறிமுகம் செய்தவர்.
இதை அடையாளப்படுத்தவே பிரைநிலவை அவரது தலையில் தாங்கியவாறு உருவகம் செய்தனர்.
வேட்டைக்கு நாய்களை (பைரவர் ) பயன்படுத்தியதால்’
காலத்தை கொடையளித்த சிவனுக்கு “கால பைரவர் ” என்ற பெயரும் உண்டு..
முதன் முதலில் யோக கலையை கற்று , குண்டலினியை யெழுப்பிய முதல் சித்தன் சிவனே.
அதனால்” ஆதி யோகி” என்றும், யோகத்தின் மூலம் கற்றறிந்த பலவற்றையும் தனது சீடர்களுக்கு போதித்தமையால் “ஆதி குரு” என்றும் அழைக்கப்பட்டார்..
குண்டலினி யோக முறையை கற்றிந்தவர் என்பதை அடையாளப்படுத்தவே ,குண்டலினியை குறிக்கும் “நாக பாம்பை ” அவரது கழுத்தில் இருப்பதாக உருவகம் செய்தனர்.
கணிமத்தில இருந்து இரும்பு உலோகத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் சிவனே. அவர் கண்டறிந்த உலோகத்திலேயே தனது வேட்டை ஆயுதமாக “திரிசூலத்தை” வடிவமைத்தார்.
இதை வரலாற்றில் கடத்தவே, சிவன் எப்போதும் திரி சூலத்துடன் காட்சி தருகிறார்.
விலங்குகளின் தோல்களில் இருந்து கொட்டிசை கருவிகளான “உடுக்கை மற்றும் பறை” போன்றவற்றை கண்டறிந்து பயன்படுத்தியமையால் சூலத்துடன் உடுக்கையும் சேர்ந்து காட்சிதருகிறார்.
நீண்ட மலைத்தொடரை தமிழில் வரை என்றும் அழைப்பர்..
வரையில் வாழ்ந்ததால் மலைவாழ் மக்களை “வரையர்” என்றும், அந்த சொல்லே மறுவி “பறையர்” என்றானது.
பறையரான சிவன் கண்டறிந்த இசைக்கருவி ஆதலால் , அதற்க்கு அவரின் பெயராலேயே “பறை” என்று பெயர் வந்தது..
உழவில் ஈடுபடாத மலைமக்கள் மாடுகளையும் வேட்டையாடி மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவர்கள் என்பதும். பிற்காலத்தில் அவர்கள் தரையிறங்கிய பிறகும் அந்த வழக்கம் தொடர்ந்தமையால் , இன்றளவும் பறையர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவர்களாக உள்ளனர்.
இதை மேலும் உறுதிசெய்யும் விதமாகவே இன்றளவும் மலைமக்களான கேரளாவிற்க்கு அதிகளவில் அடிமாடுகள் விற்க்கப்படுகிறது என்பதையும் உணருக.
எனவே பறையர் என்பது ஆதி தமிழன் சிவனின் குடியென்றும். அது இழி சொல் அல்ல என்பதையும் உணரவேண்டும்.
..தொடரும்..