சிவன் பற்றிய தேடல் – 2
சிவனை, இந்த அண்டம் பெருவெடிப்பால் ஒளியும் சப்தத்துடனுன் சதா இயங்கிகொண்டே இருக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னதால்” ஆதி ஞானி” என்றும், அதை ஓவிய வடிவில் சித்தரிக்கும் வண்ணம்.. “நடராஜராக” உருவகம் செய்தனர்.
தமிழ் பட எழுத்துக்களை உருவாக்கி வளர்த்து “முதல் தமிழ்ச்சங்கம்” கண்டவர்
இரவு மற்றும் பகல்
இன்பம் மற்றும் துன்பம்
ஆண் மற்றும் பெண்
ஆக்கம் மற்றும் அழிவு போன்ற இருமை தத்துவத்தை போதித்தவர் என்பதால் …
இவரை மனித ஆக்கத்திற்கான கடவுளாக “சிவலிங்க” வடிவிலும்
அழிவிற்க்கான கடவுளாக யமன்
எனும் “எமன்” வடிவிலும் உருவகம் செய்து வழிபட்டனர்.
இப்படி
ஆதி நாதன்
ஆதி யோகி
ஆதி குரு
காலபைரவர்
ஆக்குபவன் “சிவன்”
அழிப்பவன் “எமன்”
ஆதி ஞானி
நடராஜன்..
இப்படி எட்டு வகை குணங்களுடன் வழிபட்டனர்…
இதையே வள்ளுவர்
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
இங்கு வகையான் என்பதே
வகவான், பகவான் மற்றும் “பகவன்” என்பதாக குறிப்பிடுகிறார்…
பல வகை குணமுடைய சிவனையே பகவன் என தனது கடவுள் வாழ்த்து குறளில் குறிப்பிடுகிறார்..
அதேபோல்
” கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”
இப்படி எண்குணத்தான் என்று எட்டு வகை பரிமானங்கள் கொண்ட சிவனையே குறிப்பிடுகிறார்.
வள்ளுவன் ஒரு ஆசிவக சித்தர் என்பதும். அவர் குறிப்பிடும் கடவுளர் யாவரும் இம்மண்ணில் மனிதராக பிறந்து பிறகு மகத்தான பல சாதனைகள் புறிந்து குண்டலினி யோகத்தின் முலம் நிர்வாண நிலையை அடைந்தத சித்தர்களையே குறிக்கும்.
யோகநிலையில் ( அமர்ந்த
நிலையில்) முக்தியடைந்த சித்தர்களை, அதே நிலையில் ஒரு குடத்தினில் (கடம்) வைத்து, அவர்களை
ஜீவ சமாதி செய்வதே வழக்கம்… இதையே
கடம்+உள் = கடவுள். என்றும்
கடம் குடம் என்ற சொல்லே ஆங்கிலத்தில் GOD என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்பதை அறிக
அந்த வகையில் முதன்
முதலில் நிர்வான நிலையை அடைந்தது குடன்டலினியை யெழுப்பி ஜீவ சமாதி அடைந்த சித்தர்
“சிவன்”
ஆதலால் . இன்றளவும் அவரை கடவுளர்கெள்ளாம் கடவுளாய் நாம் பார்க்கின்றோம்..
இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை “உருக்கு வேதம்” எனும் “ருக்” வேகமாகவும்
உடுக்கை பறை போன்ற இசைக்கருவிகளை உருவாக்கும் முறையை “அதிர்வு வேதம்” எனும் “அதர்வன வேதமும்”
அரசாட்சி தத்துவங்களை “சாம, தான, பேத, தண்ட ” ஆகியவற்றை உள்ளடக்கிய “சாம வேதத்தையும்”
விண்னாய்வு, மருத்துவம், அறிவியல் உண்மைகளை “யஜூர் வேதமாகவும்”
நான்மறை வேதங்களை வழங்கியவர் சிவனே…
தொடரும்