இந்திய திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா இடம்பெற்று வருகிறது.
ஏதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறும் இந்த விழாவில் 60 படங்கள் திரையிடப்படுகின்றன.
இதில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
இதில் திருநங்கையாக நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அவர் நடிப்புக்கு ஏற்கனவே பாராட்டுகள் கிடைத்தன. இப்போது சிறந்த நடிகர் விருதையும் பெற்றுள்ளார்.
அத்துடன், இந்த விழாவில் நடிகர்களான விஜய் சேதுபதி, ஷாருக்கான், அர்ஜுன் கபூர், நடிகைகள் காயத்ரி, உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.