குடும்பத்தினர் மருத்துவ கட்டணம் முழுமையாக கட்டவில்லை என்பதற்காக, அறுவை சிகிச்சை முடித்துவிட்டு தையல் போடாமலே மருத்துவமனையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதால் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது.
மூன்று வயது குழைந்தையான குஷி மிஸ்ரா கடுமையான வயிற்று வலி காரணமாக கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி united Medicity மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை குழ்ந்தையை அனுமதித்தது, பிப்ரவரி 24 அன்று ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சையில் பலன் இல்லாததால், மார்ச் 3 அன்று குழந்தைக்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அப்போது, அவரது உடல்நிலை இன்னும் மோசமடைந்துள்ளது. அந்த நிலைமையில், அங்குள்ள மருத்துவர்கள், குழந்தையை வேறொரு குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு, மருத்துவர்கள் குழந்தைக்கு போடப்பட்டிருந்த கட்டுகளைத் திறந்து பார்த்தபோது, அறுவை சிகிச்சை வெட்டுக்கள் அனைத்தும் தையல் இல்லாமல் திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குழந்தை இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் வாழ மாட்டார் என்று மருத்துவர் கூறியுள்ளனர்.
அதனால் குழந்தையை மீண்டும் வெள்ளிக்கிழமை United Medicity-க்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, முழுமையாக காட்டினால் தான் உள்ளே அனுமதிக்கப்படும் என மருத்துவமனை அவர்களை வெளியே அனுப்பி, கேட்டை பூட்டியுள்ளது.
2 அறுவை சிகிச்சைகளுக்கான கட்டணம் ரூ. 5 லட்சம் மருத்துவமனை கோரிய நிலையில், குடும்பத்தால் ரூ .2 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ய முடிந்துள்ளது.
இதனால், சுமார் 3 மணி நேரம் உள்ளே அனுமதிக்கபடாமல் காத்திருந்த நிலையில், குழந்தை மருத்துவமனை வாசலிலேயே இறந்துவிட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குழந்தையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.