வரோதய நகரில் அமைந்துள்ள அறநெறி பாடசாலையினால், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொடி இலட்சினை விநியோகிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
அறநெறி வாரத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அறநெறி பாடசாலையை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கொடிகளை விநயோகித்து வருகின்றனர்.
இந்த நிகழ்வில். இந்து சமய அறநெறிக்கல்வி மனிதனைப் பண்புள்ளவனாகவும், மனித நேயத்தை காப்பவனாக வாழ வழி செய்கின்றது எனவும், இந்துச் சிறார்களின் நல்வழிகாட்டியே அறநெறிக்கல்வி ஆகும், போன்ற வசனங்கள் எழுதிய பதாகைகளை சிறார்கள் ஏந்திய வண்ணம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தனர்.