கிழக்கு மாகாணத்தின் “அயல் பாடசாலை-சிறந்த பாடசாலை” திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா இன்று திறந்து வைத்தார்.
கந்தளாய் வலயக்கல்வி பணிமனைக்கு உட்பட்ட ஐயந்திபுர வித்தியாலயத்தில் 20 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமே இன்று ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் அயல் பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்திற்கு 5 ஆயிரத்து 535 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் 84 பாடசாலைகளில் புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ஐ. கே. ஜீ. முத்துபண்டா தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் 2240 பாடசாலைகளில் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ. கே. ஜி. முத்துபண்டா, பாராளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.