அமேசன் காடுகள் வழியாக பயணிகள் விமானங்கள் செல்ல தடைத் விதிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசன் மத்திய தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், வெனிசுவேலா, கொலம்பியா, பொலிவியா உள்ளிட்ட பல நாடுகளை சுற்றியுள்ளது.
பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகள் உள்பட பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக அமேசான் காடுகளில் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனால் இலட்சக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் தீக்கிரையாகி வருகிறது.
இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் அமேசனில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க உதவி செய்யவேண்டுமென பிரேசில் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோன்று காட்டுத்தீ பொலிவியாவைச் சுற்றியுள்ள அமேசன் காடுகளிலும் பரவி வருவதால் 7 இலட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்புகள் தீக்கிரையாகியுள்ளது.
இந்நிலையில், காட்டுத்தீ காரணமாக அமேசன் காடுகள் வழியாக பயணிகள் விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொலிவியா விமான போக்குவரத்து ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது.