அமெரிக்க நடிகை மர்லின் மன்றோ 1962-ம் ஆண்டு இதே தேதியில் மரணம் அடைந்தார்.
1947-ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மர்லின் மன்றோ, தொடர்ந்து பல படங்களில் தனது அபார நடிப்புத் திறமையாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர். நகைச்சுவை பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.
கோல்டன் குளோப் விருது மற்றும் அனைத்து காலப்பகுதிக்குமான சிறந்த நடிகை என அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் பாராட்டும் பெற்றவர். நடிகையாக மட்டுமின்றி பாடகி, இயக்குனர் என பல்வேறு முகங்களும் இவருக்கு உண்டு.
தன்னுடைய கடைசி நாட்களில் போதைக்கு அடிமையான இவர், 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டாலும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.