அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 20 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிட்லண்ட், ஒடிசா பகுதியில் காரில் வந்த மர்ம நபர்களே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, துப்பாக்கிதாரிகள் இருவரில், ஒருவர் சுடப்பட்டதாகவும், மற்றொருவர் தேடப்பட்டு வருவதாகவும், அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், 30 வயது நிரம்பிய வெள்ளையினத்தவர் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே, கடந்த ஓகஸ்ட் மாதம் நான்காம் திகதி டெக்சாஸ் மாகாணத்தில் வோல்மார்ட் வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.