அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெய்டன் (Dayton) பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே துப்பாக்கிதாரி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், இதன்போது காயமடைந்த 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.