ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோட்டபாயராஜபக்ஷ இன்று அநுராதபுரத்திற்கு வியத்தினை முன்னெடுக்கவுள்ளார்.
இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு ருவன்வெலி மஹா விகாரையில் ஆசிர்வாத பூஜை நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பங்கேற்கவுள்ள முதல் சமய நிகழ்வாக இது காணப்படுகின்றது.
இந்தநிலையில் மஹிந்த மற்றும் கோட்டாவின் வருகையினை முன்னிட்டு ருவன்வெலி மஹா விகாரையினை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாளைய தினம் ஜய ஸ்ரீ மஹா விகாரையில் இடம்பெறும் மற்றுமொரு வழிபாட்டிலும் கோட்டா, மஹிந்த உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.