இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 12.15 மணியளவில் இந்த விபத்து சேனைக்குடியிருப்பு, துரட்டியமடு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் குறித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காமாச்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த அருளானந்தம் ஹரன் (19), மாரம்மன் கோவில் வீதி சேனைக்குடியிருப்பை சேர்ந்த கணேசன் தனுசியன், (30) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.